பிக்பாஸ் விஜய் சேதுபதி மீது போலீஸ் புகார்!
ADDED : 294 days ago
பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாவிட்டாலும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 8ல் வரும் விளையாட்டுகளும் விஜய் சேதுபதியின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் பேசிய தீபக், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபக் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆகியோர் மீதும் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.