சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சாக்ஷி அகர்வால்
ADDED : 307 days ago
வீ.ஆர்.சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் தயாரிக்கும் படம் 'தி ஸ்டிங்கர்'. ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.எஸ்.காமேஷ் இசை அமைக்கிறார், சபரி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஹரி கூறும்போது “சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் வகை படமாக உருவாகிறது. உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைகளங்கள் பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும். அனிமேஷன் வேலைகள் முடிந்திருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.