உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு

வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கடந்த வாரம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யுடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின.

அவருடைய வீட்டில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏற்றப்பட்ட விளக்குகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து “கிறிஸ்துமஸை சந்திக்கும் கார்த்திகை” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர். வழக்கம் போல விதவிதமான கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த உலகத்திற்கு எதையோ சொல்ல முயற்சிக்கிறார் த்ரிஷா என்றுதான் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !