பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை
ADDED : 431 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் தசரா, கல்கி ஏ.டி. 2898 ஆகிய படங்களுக்கும் இசையமைத்து கவனம் பெற்றார்.
இந்த நிலையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'சிக்கந்தர்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சந்தோஷ் நாராயணன்.