உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா?

மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா?

கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் ஆதிக் மற்றும் விஷால் இருவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் தற்போது அஜித் குமாரை வைத்து ' குட் பேட் அக்லி' படத்தை உருவாக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்போது ‛குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !