விஜய் சேதுபதியை விமர்சித்த பிக்பாஸ் அர்ச்சனா
ADDED : 299 days ago
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மீதும் அதன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீதும் முன்னாள் போட்டியாளர்களே கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த சீசன் அறம் இல்லாமல் நடத்தபடுவதாகவும் கமலை ஒப்பிடும்போது விஜய் சேதுபதியின் அணுகுமுறை சரியில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னதாக மஞ்சரிக்கு ஆதரவாக சனம் ஷெட்டி, விஜய் சேதுபதிக்கு கேள்விகள் எழுப்பியிருந்தார். தற்போது நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் அருண் மற்றும் தீபக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளில் பேசியிருக்க அருண் பேசியதை மட்டும் தவறு என்பது போல் காட்டியிருந்தார்கள். இதனையடுத்து தனது அருணுக்கு ஆதரவாக அர்ச்சனா அந்த வீடியோவில் விஜய் சேதுபதியை விமர்சித்து பேசியிருக்கிறார்.