சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு பெண் குழந்தை
ADDED : 299 days ago
சின்னத்திரை நடிகையான நிவேதிதா முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் சக நடிகரான சுரேந்தரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது. சில தினங்களுக்கு முன் நிவேதிதா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.