உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டன்ட் கலைஞர் மற்றும் நடிகர் கோதண்டராமன் காலமானார்

ஸ்டன்ட் கலைஞர் மற்றும் நடிகர் கோதண்டராமன் காலமானார்

பிரபல ஸ்டன்ட் கலைஞரும், நடிகருமான கோதண்டராமன், 69 உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார்.

தமிழ் சினிமாவில் சண்டை கலைஞராக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான படங்களில் பணிபுரிந்துள்ளார் கோதண்டராமன். ‛‛எல்லாமே என் பொண்டாட்டி தான், எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ் மோர்'' உள்ளிட்ட சில படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நடிகர் முரளி உடன் அதிக படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் பகவதி, திருப்பதி, கிரீடம், அந்நியன், கலகலப்பு, வேதாளம், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்தார்.

சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த அவர் இதய நோய் காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு சினிமாவை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று அவரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !