சபரிமலைக்கு சென்ற நடிகர் சசிகுமார்
ADDED : 386 days ago
சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி பரமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தவர் சசிகுமார். பின்னர் நாடோடிகள் , போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, அயோத்தி என்று பல படங்களில் நடித்த சசிகுமார் தற்போது டூரிஸ்ட் பேமிலி, நந்தன், பகைவனுக்கும் அருள்வாய் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயிசம் என்பதை தாண்டி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதைகளுக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருந்த சசிகுமார் தற்போது சபரிமலை சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.