மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
257 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
257 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
257 days ago
ஒவ்வொரு வருடமும் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு படங்கள் வெளியாவது வழக்கம். அவற்றில் எப்போதுமே தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைக்கும். ஹிந்தி, கன்னடம் மொழிகளிலிருந்து சில படங்கள் மட்டுமே தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும்.
2024ம் வருடத்தைப் பொறுத்தவரையில் சில டப்பிங் படங்கள் நேரடி தமிழ்ப் படங்களை விடவும் அதிகமான வசூலைக் குவித்துள்ளன. அதன் விபரம் வருமாறு...
மஞ்சும்மேல் பாய்ஸ்
2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது. இந்தப் படம் இங்கு தமிழகத்தில் மலையாளத்தில் நேரடியாக வெளியாகியே பெரிய வசூலைக் குவித்தது. சுமார் 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து பெரிய வரவற்பைப் பெற்றது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 240 கோடி வரை மொத்தமாக வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இடம் பெற்ற 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல்தான் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெறக் காரணமாக அமைந்தது. அந்த 'குணா குகை' தான் படத்தின் கதைக்களம் என்பதும் மற்றொரு காரணம்.
லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழில் 'அமரன்' படம் வெளியான அதே நாளில் தான் வெளியானது. மேலும், அதே நாளில் வேறு இரண்டு தமிழ்ப் படங்களும் வெளிவந்ததால் அந்தப் போட்டியை இந்தப் படம் எப்படி சமாளிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படத்திற்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமார் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து படத்தை வாங்கியவர்களுக்கு குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
புஷ்பா 2
2021ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் சுமார் 25 கோடி வசூலை மட்டுமே பெற்றது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வந்த பல படங்கள் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறவில்லை. அந்த ஒரு வசூல் வறட்சியை இந்தப் படம் நிவர்த்தி செய்துவிட்டது. முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலே குறிப்பிட்ட மூன்று டப்பிங் படங்களும் சேர்ந்து 100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. தமிழில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட தராத லாபத்தை இந்தப் படங்கள் பெற்றுத் தந்ததாகக் கூறுகிறார்கள்.
மற்ற இந்திய மொழிகளில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும் படங்கள் ஒரு பக்கம் வந்தாலும், அவற்றை விடவும் ஹாலிவுட் டப்பிங் படங்களுக்கு இங்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. ஆனால், இந்த 2024ம் வருடத்தைப் பொறுத்தவரையில் வசூலைக் குவித்த படங்களாக ஹாலிவுட் படங்கள் அமையவில்லை. இந்திய அளவிலேயே ஒரு சில படங்கள் மட்டும்தான் 100 கோடி வசூலைக் குவித்தன. இந்த ஆண்டு ஹாலிவுட் டப்பிங் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தன.
257 days ago
257 days ago
257 days ago