உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா

ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்திற்கான லொகேசன் தேடும் பணியில் ராஜமவுலி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !