பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர்
ADDED : 285 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'அமரன்'. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரியஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்கும் என்கிறார்கள்.