ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு
ADDED : 285 days ago
நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். தற்போது மோகன்லால் முதல் முறையாக இயக்கி நடித்துள்ள படம் 'பரோஸ்'. வருகின்ற டிசம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி மோகன்லால் இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது நேர்காணலில் மோகன்லால் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்த எனது சில படங்கள் பல நேரங்களில் தவறியது. இதனால் எனது அடுத்த படம் ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கின்றேன். இதற்காக பல கதைகளைக் கலந்து உரையாடி வருகிறோம். இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறினார்.