சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா
ADDED : 285 days ago
ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா, பசுபதி மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடத்தில் வெளியிட்டார்கள்.
இதற்கிடையில் ரஞ்சித் தங்கலான் படத்தினை இயக்கி முடித்து அடுத்து வேட்டுவம் எனும் புதிய படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் சார்பட்டா பரம்பரை 2 எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என நடிகர் ஆர்யா, ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார் .