ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம்
ADDED : 371 days ago
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.