மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
284 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
284 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
284 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
284 days ago
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் அதை விட பெரிய விளம்பரத்தை, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடுத்திருக்கிறது. இப்படியே போனால் படம் 2 ஆயிரம் கோடி வசூலித்து விடும் என்கிறார்கள்.
படம் வெளியாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியான படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் நேரடியாக சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் ஆஸ்பத்திரியில் ஆபத்தான் முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்லுஅர்ஜுனை கைது செய்தனர், 14 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜுனின் ஜாமினை எதிர்த்து தெலுங்கானா போலீசார் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.
தெலுங்கானா முதல்வரும் இந்த விஷயத்தில அல்லு அர்ஜூனை நேரடியாகவே எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை ஒரு கும்பல் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் தக்காளியையும் வீசி எறிந்தனர். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பூந்தொட்டிகள் சேதம் அடைந்தன. மேலும் அவர்கள் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அர்ஜுன் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது அல்லு அர்ஜுன் வீட்டில் யாரும் இல்லை.
284 days ago
284 days ago
284 days ago
284 days ago