கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல்
ADDED : 297 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த படம் கங்குவா. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், ஓடிடி தளத்தில் நல்ல ஆதரவு பெற்று வருவதாக கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் கங்குவா படத்தில் கொடுவன் என்ற ஒரு வேடத்தில் நடித்திருந்த நட்டி நட்ராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு விமர்சிக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தை பார்த்தால் இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். கங்குவா படத்தின் அருமை அப்போதுதான் அனைவருக்கும் புரியும்'' என்று தெரிவித்திருக்கிறார்.