தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் மிருணாள் தாகூர்!
ADDED : 285 days ago
துல்கர் சால்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர். தற்போது ஹிந்தியில் நான்கு படங்களில் நடித்து வரும் அவர், தெலுங்கில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் வெளியேறிய 'டக்கோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்சன் வேடத்தில் நடித்து வரும் மிருணாள் தாகூர், தனது உடல்கட்டை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவர், ஜிம்மில் தலை கீழாக ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.