மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
282 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
282 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
282 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
282 days ago
டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'. குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'உறுமீன், பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை வரும் டிச.,27ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'அலங்கு படம் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதனின். நாயின் மீதான காதல் பற்றிய ஒரு பழமையான மற்றும் கிராமிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.
282 days ago
282 days ago
282 days ago
282 days ago