சமந்தா நடிப்பைக் கண்டு நான் பயப்படவில்லை! - கீர்த்தி சுரேஷ்
தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் 'தெறி'. இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார். தற்போது தெறி படத்தை ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். இதில் விஜய் நடித்த ரோலில் வருண் தவானும், சமந்தா நடித்த ரோலில் கீர்த்தி சுரேசும் நடித்துள்ளார்கள். இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலரை கைபிடித்த கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''பேபி ஜான் படம் தெறி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் ஹிந்தி பதிப்புக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதோடு தெறி படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். என்றாலும் அவரது கதாபாத்திரத்தை நான் துணிச்சலாக ஏற்று நடித்தேன். அவரைப் போன்று நம்மால் நடிக்க முடியுமா என்று நான் பயப்படவில்லை. அப்படி நடித்ததின் காரணமாக இப்போது பேபி ஜான் படத்தில் என்னுடைய கேரக்டரும் மிகச் சிறப்பாக வந்துள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.