உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து டப்பிங் பணிகளையும் அஜித் நிறைவு செய்துள்ளார்.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அனிரூத் இசையில் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை டிசம்பர் 27ம் தேதி மதியம் 1 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு அஜித், த்ரிஷா இருவரும் உள்ள போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !