சப்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ
ADDED : 326 days ago
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகி நீண்ட மாதங்களாக திரைக்கு வர காத்திருக்கும் படம் 'சப்தம்'. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில் ஏதோ ஒரு சில காரணங்களால் அப்போது திரைக்கு வரவில்லை. இப்போது சப்தம் திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என புதிய ரிலீஸ் தேதியுடன் அறிவித்துள்ளனர்.