மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
278 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
278 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
278 days ago
தென்னிந்தியாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்று வட இந்தியாவில் முகமது ரபி. ஹிந்தியில் மட்டும் 28 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். இது தவிர கொங்கனி, அஸ்ஸாமி, போஜ்புரி, ஒடியா, பெங்காலி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் 7,000 பாடல்களை பாடி உள்ளார். ஆங்கிலம், பாரசீகம், அரபு, சிங்களம், மொரிஷியன் கிரியோல் மற்றும் டச்சு உட்பட சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடினார். லதா மங்கேஷ்கர் பெண் குரல் என்றால் இவர் ஆண் குரலில் வட இந்திய மக்களை வசீகரித்தவர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிமான இவர் பல இந்து பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். அரசின் பத்ம விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளார். 1924ம் ஆண்டு பிறந்த இவருக்கு இது 100வது ஆண்டு.
இதனை கொண்டாடும் வகையில் அவரது வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். இந்த படத்தை உமேஷ் சுக்லா இயக்குகிறார். தற்போது இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற விபரங்கள் வெளியிடப்பட இருக்கிறது.
278 days ago
278 days ago
278 days ago