கவின் நடிக்கும் கிஸ் படத்திலிருந்து வெளியேறிய அனிருத்?
ADDED : 319 days ago
தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி சினிமா வரை இசையமைத்து வருகிறார் அனிருத். அஜித்தின் விடாமுயற்சி படத்தை அடுத்து ரஜினியின் கூலி, விஜய் 69 போன்ற படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், ஷாருக்கான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழில் கவின் நடித்து வரும் கிஸ் படத்திற்கும் இசையமைக்க கமிட்டாகி இருந்தார் அனிருத். ஆனால் கிஸ் என்ற படத்திலிருந்து தற்போது வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே தான் கமிட்டாகி உள்ள படங்கள் மற்றும் சம்பளம் விஷயத்தால் அனிருத் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.