ஜெயிலர் 2வில் தமன்னாவும் இருக்கிறார்
ADDED : 365 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 600 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அடுத்து நடிக்க போகிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் நெல்சன்.
ஜெயிலர்-2 படத்தில் கேஜிஎப், கோப்ரா போன்ற படங்களில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்திருந்த தமன்னாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஜெயிலர் படத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் அழுத்தமான வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.