மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
252 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
252 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
252 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
252 days ago
2024ம் ஆண்டில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சுமாரான ஆண்டாகவே முடிவுக்கு வர உள்ளது. 230 படங்கள் வரையில் வந்த நிலையில், அவற்றில் சராசரியாக படத்திற்கு 4 பாடல்கள் என்றால் கூட 900க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், அவற்றில் 10 பாடல்கள் கூட சூப்பர்ஹிட் பாடல்கள் ஆக அமையவில்லை.
முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.
யு டியூப் வந்த பிறகு 100 மில்லியன் பார்வைகளைப் பெறும் பாடல்கள் என்பது சூப்பர் ஹிட் பாடல்கள் என்ற ஒரு அடையாளமும் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டில் அப்படி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்கள் இரண்டே இரண்டு என்பது அதிர்ச்சியான ஒரு தகவல். யு டியூப் தவிர்த்து இணையதளம், வானொலி என அலசி தேடிப் பார்த்தாலும் பத்துக்கும் குறைவான பாடல்கள்தான் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல்களாக இருக்கின்றன.
இந்த ஆண்டில் வெளியான பாடல்களில் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்கள் சில…
1. அரண்மனை 4 - அச்சச்சோ…
இசை - ஹிப்ஹாப் தமிழா
283 மில்லியன் பார்வைகள்
2. ராயன் - வாட்டர் பாக்கெட்
இசை - ஏஆர் ரஹ்மான்
151 மில்லியன் பார்வைகள்
3. வேட்டையன் - மனசிலாயோ..
இசை - அனிருத்
133 மில்லியன் பார்வைகள்
4. தங்கலான் - மினுக்கி மினுக்கி…
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
91 மில்லியன் பார்வைகள்
5. தி கோட் - விசில் போடு…
இசை - யுவன் ஷங்கர் ராஜா
77 மில்லியன் பார்வைகள்
6. தி கோட் - மட்ட மட்ட…
இசை - யுவன் ஷங்கர் ராஜா
73 மில்லியன் பார்வைகள்
7. பிரதர் - மக்காமிஷி…
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
64 மில்லியன் பார்வைகள்
8. ராயன் - அடங்காத அசுரன்…
இசை - ஏஆர் ரஹ்மான்
56 மில்லியன் பார்வைகள்
9.அமரன் - ஹே மின்னலே…
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
53 மில்லியன் பார்வைகள்
2024ல் வெளிவந்த படங்களின் பாடல்களில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 'அரண்மனை 4' படத்தில் இடம் பெற்ற 'அச்சச்சோ' பாடல் 283 மில்லியனைக் கடந்தது. பாடலை விடவும் தமன்னா, ராஷி கண்ணாவின் கிளாமர் நடனம் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஏஆர் ரஹ்மான் இசையில் வந்த 'ராயன்' படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் 151 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அந்தப் பாடலில் தனுஷ் இடம் பெறவில்லை என்றாலும் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பாகவே இருந்தது.
அனிருத் இசையில் வெளிவந்த 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் அனைவரையும் ஆட வைத்த பாடலாக அமைந்தது. வருடத்திற்கு ஒரு பாடலையாவது 100 மில்லியனைக் கடக்க வைத்துவிடுகிறார் அனிருத்.
விஜய் நடிக்கும் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. அவர்கள் கூட்டணியில் வந்த 'தி கோட்' படத்தின் இரண்டு பாடல்கள் 70 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
இந்த வருடம் வெளிவரவில்லை என்றாலும் அடுத்த வருடம் வெளியாக உள்ள, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் இடம் பெற்றுள்ள 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஷங்கர் - அனிருத் கூட்டணி முதல் முறை இணைந்த 'இந்தியன் 2' படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒரு பாடல் கூட ரசிகர்களைக் கவராமல் போனது அதிர்ச்சிதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் இசையில் வந்த 'பிரதர்' படத்தின் 'மக்காமிஷி' பாடல் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமா பாடல்கள் ஏமாற்றத்தைத் தந்தாலும் அடுத்த வருடம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வர இருப்பதால் கூடுதலான 100 மில்லியன் பார்வை பாடல்களை இப்போதே எதிர்பார்க்கலாம்.
252 days ago
252 days ago
252 days ago
252 days ago