மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
274 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
274 days ago
2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி', அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடித்துள்ள ஒரு படம் வரப் போகிறது, கொண்டாடித் தீர்ப்போம் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாகாது தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்து வதந்திகள் பரவி வந்தது. திரையுலகில் விசாரித்த போது அது வேண்டுமென்றே பரப்புகிறார்கள். படத்திற்கு சென்சார் விண்ணப்பம் கூட செய்துவிட்டார்கள் என்றார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இப்படி தள்ளி வைத்திருப்பது திரையுலகினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால், இந்த 2025ம் ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் ஆரம்பமாகிறது.
274 days ago
274 days ago