உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு பலமாக இருப்பவர் இளையராஜா: கன்னட இயக்குனர் ரஞ்சனி ராகவன்

எனக்கு பலமாக இருப்பவர் இளையராஜா: கன்னட இயக்குனர் ரஞ்சனி ராகவன்


கன்னட நடிகையும், எழுத்தாளரும் இயக்குனருமான ரஞ்சனி ராகவன் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணிபுரிவது பற்றியும், அவரை சந்தித்தது பற்றியும் பதிவிட்டது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.

புத்தாண்டு தினமான நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: புத்தாண்டு தினம், என் புதிய வேலையைச் சொல்ல பதட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. முன்னதாக கதைகளை எழுத்து மற்றும் நடிப்பு மூலம் வழங்க முயற்சி செய்திருக்கிறேன். இப்போது முதல் முறையாக பெரிய திரையில் ஒரு கதையை உங்களுக்குக் காண்பிக்க வேலை செய்கிறேன். புது வேலைனு சொல்றத விட சினிமா டைரக்டர் ஆகணும்னு கனவு கண்டு பல வருஷம் ஆச்சு, இந்த கதை பிறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஒன்றரை வருடமாக இந்த ஓவியத்தை எழுதி திருத்தி வருகிறேன்.

திரையுலகில் பலரின் உதவியோடும் ஊக்கத்தோடும் எங்கள் தயாரிப்பாளர் டாக்டர்.ஆனந்த் மற்றும் ராமகிருஷ்ண சுப்ரமணியம் ஒத்துழைப்போடும் எங்கள் சினிமாவை பற்றி பேசும் தைரியம் எங்களுக்கு இருக்கிறது. இந்த பயணத்தில் எனக்கு பலமாக இருந்த மேஸ்ட்ரோ இசைக்கலைஞர் இளையராஜா ஐயா. அதிக படத்திற்கு இசை கொடுத்தவர்கள் என் கதையை பாராட்டி துணை நிற்கிறார்கள்.

செப்டம்பர் 3 அன்று இவரை சந்தித்து கதை சொல்லும் அதிர்ஷ்டம் வந்த போது, சென்னை போய் இவரை சந்தித்து, காலில் விழுந்து போட்டோ எடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்தேன்! கதை சொல்லும் போது, கன்னடம், எனக்கு நன்றாக வரும்; கொல்லூரு மூகாம்பிகை என்னவள் தான் என்று மூன்று நாட்களில் பேச ஆரம்பித்தவர், கதை தன் மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.

நம்ம சினிமாவின் ஒரு பகுதியாக இன்று இளையராஜா சார் நம்மை One Call Away என்ற ஜாம்பவான் ஆகி விட்டார். கடந்த வருடம் ஜனவரி 19 என் புதிய கனவைப் பற்றி பதிவு செய்தேன். ஆனால் அது என்னவென்று நான் சொல்ல வேண்டியிருந்தது! சினிமா எடுக்கும் போது எல்லாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை என்பது கற்றுக்கொண்ட பாடமாக இருந்தாலும் நல்ல சினிமா எடுக்க என்ன தேவைப்படுகிறதோ அது கிடைக்கும் என்ற நம்பிக்கை. கன்னடர்களின் ஆசீர்வாதத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டி நான் முன்னேறுவேன்,” என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !