வெள்ளித்திரையில் நுழையும் மகா நடிகை போட்டியாளர்
ADDED : 284 days ago
ஜீ தமிழில் சிறந்த திறமையாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாக மகா நடிகை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு பெண்கள் திரையில் நடிகையாகும் தங்களது கனவுக்கு முதல் படியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா சுப்பிரமணியன் என்ற போட்டியாளருக்கு வெள்ளித்திரையில் நடிகையாகும் கனவு நனவாகியுள்ளது. இதனால் மகா நடிகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட நிகழ்ச்சி குழுவினர் அவரை வாழ்த்தி வழி கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் ஜீ தமிழ் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பாராட்டுகளையும், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகளையும் கூறி உள்ளனர்.