வெப்சீரிஸில் கமிட்டான ஆயிஷா - புவியரசு
ADDED : 283 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஆயிஷா. அதன்பின் பிக்பாஸ் ஷோவில் நுழைந்த அவர் தனது காதலரை அறிமுகம் செய்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு எந்த தகவலும் வெளிவரவில்லை. இதற்கிடையில் உப்பு புளி காரம் வெப்சீரிஸில் நடித்திருந்த ஆயிஷா, தற்போது யு-டியூபில் வெளியாகவுள்ள தாரா என்கிற வெப்சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த வெப்சீரிஸில் ஆயிஷாவுக்கு ஜோடியாக ஜீ தமிழில் சீரியல்களில் நடித்து வந்த புவியரசு நடிக்கிறார்.