உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா ஆகப்போகும் அவினாஷ்

அப்பா ஆகப்போகும் அவினாஷ்

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அவினாஷ் தொடர்ந்து சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்தார். அழகு, அம்மன், சாக்லெட் ஆகிய சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக கயல் சீரியல் நடித்த போது பாதியிலேயே வெளியேறினார். அண்மையில் தனது நீண்ட நாள் காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்து கொண்ட அவினாஷ், தற்போது தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை க்யூட்டான புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவினாஷ் - தெரசா தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !