காதலை அறிவித்த சங்கீதா - அரவிந்த் சேஜு
ADDED : 339 days ago
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சங்கீதா தொடந்து அழகு தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு கனா காணும் காலங்கள், தமிழும் சரஸ்வதியும் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இவர் கனா காணும் காலங்கள் தொடரில் கலை என்கிற கேரக்டரில் நடித்த அரவிந்த் சேஜு என்பவரை காதலிப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், இருவரும் விரைவிலேயே திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.