தண்டேல் படத்திற்காக நாகசைதன்யாவுடன் பக்தி பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி!
ADDED : 316 days ago
அமரன் படத்தை அடுத்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல், ஹிந்தியில் ராமாயணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதில் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் அவர் நடித்துள்ள தண்டேல் படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த நவம்பரில் வெளியான நிலையில், தற்போது 'நமோ நம சிவாய' என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தி பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு கையில் ஈட்டியை ஏந்தி நாகசைதன்யாவும், சாய் பல்லவியும் அதிரடியான நடனமாடி இருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது.