உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி 173வது படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி?

ரஜினி 173வது படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி?

அமரன் படத்தை அடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, அதையடுத்து ஹிந்தியில் ஏக் தின், ராமாயணா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை சுந்தர். சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட போது சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் கதையில் ஏற்பட்ட பிரச்சினையால் சுந்தர்.சி அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், பின்னர் ரஜினி 173வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குவதாக இருந்தபோதே ராஜ்கமல் பிலிம்ஸ் சாய் பல்லவியிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதையடுத்து ரஜினி 173 வது படத்துக்கு இயக்குனர் மாறிவிட்டதால் இரண்டு முன்னணி நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த இரண்டு நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இந்த படம் குடும்ப கதையில் உருவாகும் நிலையில் அதில் ஒரு முக்கிய வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !