மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : 314 days ago
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான். ‛கடமான் பாறை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதை மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்தார். கடந்த டிச.,4ம் தேதி கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி துக்ளக் அலிகானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
துக்ளக்கின் ஜாமின் மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சென்னை ஐகோர்ட்டி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். மேலும் தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.