உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேன்டஸி காதல் கதையாக உருவாகும் 'யோலோ'

பேன்டஸி காதல் கதையாக உருவாகும் 'யோலோ'

எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்கும் படம் 'யோலோ'. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சாம் இயக்குநராக அறிமுகமாகும் படம். இதில் தேவ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, நிக்கி, சுபாஷினி கண்ணன் நடித்துள்ளனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் சாம் கூறும்போது, “இது முழுநீள ரொமான்டிக் படம். அதே சமயம், காமெடியும் இருக்கும். ரத்தம் தெறிக்கும் படங்களே அதிகம் வரும் சமயத்தில் ரசிகர்களுக்கு இந்த படம் மாறுதலாக இருக்கும். இரண்டு பேர் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை மற்றொரு இரண்டு பேர் வாழ்கிறார்கள். இதுதான் இதன் ஒன்லைன். அந்த 2 பேர் யார்? ஆவியா, அமானுஷ்ய சக்திகளா என்பது சஸ்பென்ஸ். படத்தில் பேன்டஸி விஷயமும் இருக்கிறது. காதல், காமெடியுடன் பேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !