மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
268 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
268 days ago
சமீப காலமாக பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் முதல் நாள் அன்றோ அல்லது அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களிலோ ரசிகர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. அப்படி சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்கிற குடும்பத் தலைவி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய இரண்டு ரசிகர்கள் வாகன விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காக்கிநாடாவை சேர்ந்த மணிகண்டா மற்றும் தொக்கடா சரண் ஆகிய இருவரும் தான் இந்த விபத்தில் பலியானவர்கள். இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ இந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் உதவி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார்.
268 days ago
268 days ago