'புஷ்பா 2' படத்தில் கூடுதல் 20 நிமிடங்கள் சேர்ப்பு
ADDED : 267 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 1831 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
'புஷ்பா 2' படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள். அதுவே அதிக நீளம் கொண்டதாக பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 11ம் தேதி முதல் மேலும் 20 நிமிடங்களை சேர்த்து முழு படமாக திரையரங்கில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட 20 நிமிட காட்சிகளையும் சேர்த்து 11ம் தேதி முதல் திரையரங்கில் காணலாம். இதனால் மொத்த படத்தின் நீளம் 3 மணிநேரம் 40 நிமிடமாக மாறுகிறது.