தனியார் துப்பறிவாளராக நடித்துள்ள மம்முட்டி
ADDED : 318 days ago
கவுதம் வாசுதேவன் இயக்கும் முதல் மலையாள படம் 'டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்'. இந்த படத்தை மம்முட்டி தயாரித்து, நடிக்கிறார். சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் மம்முட்டி தனியார் துப்பறிவாளராக நடிக்கிறார். தொடர்ந்து இளம் பெண்கள் மாயமாகும் ஒரு வழக்கில் ஒரு பெண்ணின் பர்சிலிருந்து துப்பு துலக்கி மம்முட்டி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. சிறிய பட்ஜெட்டில் குறுகிய கால தயாரிப்பாக இந்த படம் உருவாகி உள்ளது. இது ஒரு கொரியன் படத்தின் தழுவல் என்ற தகவலும் உள்ளது.