பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் மறுபக்கத்தை காட்டும் காஜல் அகர்வால் படம்
ADDED : 313 days ago
பாலிவுட்டில் அடுத்து தயாராக இருக்கும் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இந்த படம் இந்தியாவில் செயல்படும் சர்வதேச மற்றும் இந்திய பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் கைகோர்த்து இந்திய விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து தயாராகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் சார்பில் சாகர் பி ஷிண்டே தயாரிக்கிறார். சேத்தன் டிகே இயக்குகிறார். ஷ்ரேயாஸ் தல்படே கதை நாயகனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. தி கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் படங்களுக்கு போட்டியாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.