உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாக்கப்பட்ட பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டு இழப்பீடு தர தயார் : நீதிமன்றத்தில் மோகன் பாபு மனு

தாக்கப்பட்ட பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டு இழப்பீடு தர தயார் : நீதிமன்றத்தில் மோகன் பாபு மனு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபு குடும்பத்துக்குள் சொத்து தகராறு நடந்து வருகிறது. தந்தையும் மகனும் சண்டை போட்டனர். இது குறித்து பேட்டி எடுப்பதற்காக, மோகன்பாபு வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போது, மோகன்பாபு பத்திரிகையாளர் ஒருவரின் மைக்கை மைக்கை பறித்து பத்திரிகையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன் பாபு கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மோகன் பாபு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோகன்பாபு மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மோகன்பாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன்பாபு மன்னிப்பு கேட்கவும், இழப்பீடு அளிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை மோகன் பாபுவை கைது செய்ய தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !