30 வருடத்தில் இதுவே முதல் முறை - பாடகர் உன்னி கிருஷ்ணன்
ADDED : 243 days ago
பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் 30 வருடங்களாக படங்களில் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் பிரபுவேதா நடித்த காதலன் படத்தில் என்னவளே பாடல் மூலம் தான் இவர் அறிமுகமானார். முதல் பாடலுக்கே தேசிய விருதும் பெற்றார்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் பிரபுதேவா உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, ‛‛சினிமாவில் என்னுடைய முதல் பாடலான ‛என்னவளே' பாடலைப் பிரபுதேவாவின் படத்தில்தான் பாடினேன். ஆனால், இந்த 30 வருடத்தில் அவருடன் நான் எடுக்கும் முதல் புகைப்படம் இதுதான்'' என மகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.