குடும்பஸ்தன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 312 days ago
குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கியுள்ள 'குடும்பஸ்தன்' படத்தில் நடித்துள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வைஷாக் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் தான் இந்த படத்தின் கதை. தற்போது இப்படம் வருகின்ற ஜனவரி 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.