உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் ரீ ரிலீஸ் ஆகும் இன்டர்ஸ்டெல்லார்!

இந்தியாவில் ரீ ரிலீஸ் ஆகும் இன்டர்ஸ்டெல்லார்!


கடந்த 2014ம் ஆண்டில் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த படம் ' இன்டர்ஸ்டெல்லார்'. இதில் மேத்யூ மெக்கானிங், ஜெசிக்கா சஸ்டின், அன்னி ஹெத்வி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளியாகி உலகளவில் இந்த படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

இந்த நிலையில் இப்படம் திரைக்கு வந்து 10 வருடங்கள் ஆனதால் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அன்று ரீ ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்தனர். ஆனால், புஷ்பா 2 அந்த சமயத்தில் வெளியானதால் இந்தியாவில் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை. தற்போது இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் பிப்ரவரி 7ம் தேதி இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !