காதலிக்க நேரமில்லை - ஜெயம் ரவிக்கு 'கம் பேக்' ஆக அமையுமா?
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இயக்குனர்கள்தான் இருக்கிறார்கள். 'வணக்கம் சென்னை, காளி' படங்களுக்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள 'காதலிக்க நேரமில்லை' ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், டிஜே பானு, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். படத்தின் தலைப்பே இது காதல் படம் என்று சொல்லிவிடும். தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வருவது வெகுவாகக் குறைந்துள்ள சூழலில் இந்தப் படம் வெளியாகிறது.
இந்தப் படம் யாருக்கு முக்கியமோ இல்லையோ ஜெயம் ரவிக்கு மிகவும் முக்கியம். 'கோமாளி' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவிக்கு தனித்த வெற்றி கிடைக்கவில்லை. 'அகிலன், இறைவன், சைரன், பிரதர்' என தொடர்ந்து தோல்விப் படங்களைத்தான் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்குத்தான் திருப்புமுனையைத் தர வேண்டும். ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்பே ஹிட்டாகிவிட்டதால் படத்திற்கு ஓபனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் மும்முனைப் போட்டியில் இந்தப் படம் முந்துமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.