உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பொன்னியின் செல்வன் நடிகை!

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பொன்னியின் செல்வன் நடிகை!


கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‛ரெட்ரோ' படத்தை அடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‛பேட்டைக்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றி மாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படத்தில் அவர் நடிக்க போகிறார். கடந்த 2020 ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சி. சு .செல்லப்பா எழுதியுள்ள வாடிவாசல் என்ற நாவலை தழுவி இயக்குகிறார் வெற்றி மாறன். இந்த நிலையில் இந்த வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்த ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !