உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி

மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி

வெள்ளித்திரை நடிகையான நளினி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். சில காலத்திற்கு முன் வெள்ளித்திரையிலும் வாய்பிழந்து தவித்த அவர் குட்டி பத்மினி தயாரித்த கிருஷ்ணதாசி சீரியல் தான் தனக்கு மறுபிறவி தந்ததாக கூறியிருக்கிறார். கிருஷ்ணதாசி தொடர் அந்த நேரத்தில் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வாழ்க்கையில் பல கடினமான சூழலில் அவதிப்பட்டு வந்த நளினிக்கு கிருஷ்ணதாசி சீரியல் தான் சின்னத்திரையில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நளினி, கிருஷ்ணதாசி தொடரில் தனக்கு வாய்ப்பளித்த குட்டி பத்மினிக்கு பலமுறை தனது நன்றியினை காணிக்கையாக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !