உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன்

மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. நியாஸ் கான், ஸ்வாதி கொண்டே, ப்ரீத்தி சஞ்சீவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் டிஆர்பியிலும் அசத்தி வருகிறது. இந்நிலையில், கதையின் போக்கில் மாற்றத்தை கொண்டு வரும் பொருட்டு மிதுன் என்ற நடிகரை கமிட் செய்துள்ளனர். சில சீரியல்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் மூன்று முடிச்சு தொடரில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !