ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன்
ADDED : 305 days ago
கடந்த 2016ம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ரஜினி முருகன்'. சூப்பர் ஹிட்டான இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
ரஜினி முருகன் படம் திரைக்கு வந்து 9 வருடங்கள் ஆனதை ஒட்டி விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதன் மூலம் சிவகார்த்திகேயன் திரைப்படம் முதன்முறையாக ரீ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.