சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா
ADDED : 260 days ago
மலையாள சினிமாவில் இயக்குனர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் பசில் ஜோசப். இவர் கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் சூர்யாவிடம் பசில் ஜோசப் புதிய படத்திற்காக ஒரு கதையை கூறியுள்ளார். இது சூப்பர் ஹீரோ சம்மந்தப்பட்ட படம் என்கிறார்கள். இதுதொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு பசில் ஜோசப் கதையில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படங்கள் தவிர்த்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.